August 10, 2017 தண்டோரா குழு
மருத்துவர்கள் மருந்து சீட்டில் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் என்று பாட்னாவைச் சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜுஹி என்ற மாணவி, சுமார் ஒரு மாதத்திற்கு முன் உடல் நலக்குறைவால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு மலேரியா அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.காய்ச்சல் குறைய Lumerax 80 என்னும் மருந்துதை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அவர் மருந்து சீட்டை மருந்து கடையில் காட்டியபோது, அவருக்கு Lumarax 80 என்னும் மருந்து தரப்பட்டது. அந்த மருந்தை உட்கொண்ட பிறகு, ஜுஹிக்கு பக்கவாதம் ஏற்படுள்ளது. இந்நிலையில்த மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற போது, அவருடைய நிலையைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது குறித்து விசாரித்தபோது, மனநிலை பிரச்சனைக்கு தரப்படும் Lumarax 80 மருந்து அவருக்கு தரப்பட்டது தெரிய வந்துள்ளது. அந்த மருந்துக்கடை ஊழியர், மருந்து சீட்டில் எழுதப்பட்டிருந்த மருந்த தெளிவாக இல்லாததால், மருந்தை மாற்றி தந்ததும் தெரிய வந்ததது.
இதனையடுத்து, மருத்துவர்கள் மருந்து சீட்டில் தெளிவாகவும், பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று பாட்னா எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையிலிருக்கும் அனைத்து துறைகளும் அந்த உத்தரவை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று பாட்னா எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.