August 10, 2017 தண்டோரா குழு
காதலுக்கு பணமோ சொத்தோ முக்கியமில்லை என்று மலேசியா தொழிலதிபர் மகள் தன் வாழ்கையில் நிருபித்துள்ளார்.
மலேசியா நாட்டின் தொழிலதிபர் கேபெங்(78), Malayan United Industries நிறுவனத்தின் உரிமையாளர். . கடந்த 2015ம் ஆண்டு, மலேசியாவின் 50 கோடிஸ்வரர்கள் யார் என்னும் ஆய்வை போர்பஸ் பத்திரிக்கை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் கே பெங் 44வது இடத்தில் இருந்தார். அவருடைய சொத்துக்களின் மதிப்பு மொத்தம் 300 மில்லியன் டாலர் ஆகும்.
கடந்த 2008ம் ஆண்டு, கே பெங்கின் மகள் ஏஞ்சலின் பிரான்சிஸ்கோ இங்கிலாந்தில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்.அப்போது கரீபியன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெடிடியா பிரான்சியஸ் என்பவரை சந்தித்துள்ளார்.இவர்களுடைய நட்பு, காதலாக மாறி, திருமணம் செய்துகொள்ள விரும்பினர். ஏஞ்சலின் தனது விருப்பத்தை தனது தந்தையிடம் தெரிவித்தார். ஆனால், அவர்களுடைய திருமணத்திற்கு ஏஞ்சலின் தந்தை சம்மதம் தெரிவிக்கவில்லை.
தனது தந்தை மனம் மாறி திருமணதிற்கு சம்மதம் தருவார் என்று ஏஞ்சலின், சிறிது காலம் பொறுமையோடு இருந்தார். ஆனால், திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கதையடுத்து, தன்னுடைய காதலரை திருமணம் செய்துக்கொண்டார் ஏஞ்சலின்.
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது உண்டு. ஆனால், காதலுக்கு சொத்து முக்கியமில்லை என்று அதை உதறி தள்ளிவிட்டு வந்த ஏஞ்சலின்னை சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.