August 11, 2017
tamilsamayam.com
சமந்தா – நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். தற்போது இவர்களது காதல் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இவர்களின் நிச்சயத்தார்த்தம் கடந்த சில் மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இந்நிலையில், இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி, கோவவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இவர்களது திருமண அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் தேதி கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெறயுள்ளது.
இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மட்டும் பங்கேற்பார்களா அல்லது திரை பிரபலங்களும் பங்கேற்பார்களா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.