August 11, 2017
tamilsamayam.com
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது.
நாக்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூர் புல்ஸ் அணியை எதிர்த்து களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 12-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் பெற்றது.
மிகவும் சவாலாக அமைந்த இரண்டாவது பாதியில் கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணி 29-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. தமிழக தலைவாஸ் அணியில் சேலத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.
முந்தைய போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி – புனேரி பல்டன்ஸ் அணியை தோற்கடித்தது.