August 11, 2017 தண்டோரா குழு
மருத்துவ படிப்பில் தமிழக அரசின் 85 % உள் ஒதுக்கீடு தொடர்பான மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
நீட் தேர்வில் தமிழக அரசு பிறப்பித்துள்ள 85 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அரசாணையை கடந்த ஜூலை 31ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது.இந்த தீர்ப்பை எதிர்த்தும், 85 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணையின் முடிவில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. “தமிழகத்தில், 85% உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ததைத் தடை செய்ய முடியாது எனவும் சி.பி.எஸ்.இ , மாநில பாடத்திட்டம் என மாணவர்களிடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது” என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.