August 11, 2017 தண்டோரா குழு
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை செயலாளராக உதயச்சந்திரன் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.இவர்
பள்ளிக்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் பொதுத்தேர்வுகளில் தரவரிசையை ஒழித்தது, 11-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வை அறிமுகம் செய்தது, பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர்.
இந்நிலையில் இவரை இடமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டு வந்தது.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயச்சந்திரன் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,பொநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை இடம்மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் பாடத்திட்டத்தை மாற்றும் குழுவில் உள்ள யாரையும் பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.