August 11, 2017
தண்டோரா குழு
நடிகர் அஜித் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எவரேனும், பணக்கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விபட்டால் தன்னால் முயன்ற உதவியை செய்வார். இந்த குணத்திற்காகவே அவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்தநிலையில் தயாரிப்பாளர் தாணு ஒரு பேட்டியில் அஜித் பற்றி பேசியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,
“அஜித் மிகவும் அருமையான மனிதர். அவர் இப்போதே என்னை அழைத்தாலும் அவருடன் இணைந்து படம் தயாரிக்க நான் தயார். என்னுடைய கஷ்ட காலத்தில் எனக்கு துணையான நின்றவர் அஜித்” என்று கூறியுள்ளார்.