August 12, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் பள்ளி மாணவன் கன்சாஸ் மாகணத்தின் ஆளுநர் பதவிக்கு போட்டியிட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜாக் பேர்ஜேசன் என்னும் 16 வயது மாணவன், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆளுநருக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளான்.
அமெரிக்காவின் குடிமக்கள் வாக்களிக்க 18 வயது உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது அந்நாட்டின் சட்டம் ஆகும். அமெரிக்காவின் அனைத்து மாகாணத்திலும், ஆளுநர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் குறைந்த பட்சம் 30 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது, 16 வயது வாலிபன் ஆளுநர் பதவிக்கு போட்டியிட விரும்புவது சாத்தியமா? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கன்சாஸ் மாகாணத்தில் அரசு பதவிகளுக்கு சரியான வயது வரம்பை விதிக்காததால், ஜாக்கின் தேர்தல் பிரச்சாரம் சாத்தியமாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பள்ளியின் கடைசி ஆண்டில் படித்துக்கொண்டிருக்கும் ஜாக், ஒரு வேலை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், அரசு பணியையும் பள்ளி படிப்பையையும் சமநிலையாக கவனித்துக்கொள்ள வேண்டும். `
“அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயது ஆளுநர் என்னும் நிருபிக்க போகிறேன்.மேலும் என்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு இதுவரை 1,300 டாலர்கள் கிடைத்துள்ளது. இளம் வயது வாலிபர்கள், அரசு பதவியை ஏற்க விரும்புவதை பலர் ஏற்றுக்கொள்வதுமில்லை, புரிந்துகொள்வதுமில்லை. அரசின் பழைய முறைகளை மாற்றி புதிய ஆட்சி முறையை இளைஞர்கள் நிச்சயம் அமைக்க முடியும்” என்று ஜாக் தெரிவித்துள்ளான்.