August 12, 2017
தண்டோரா குழு
உலகப்புகழ் பெற்ற நடிகர் புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது. இப்படத்தை சேகர் கபூர் இயக்கவுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் புரூஸ்லீயின் படத்திற்கும் இசையமைக்கிறார் என அந்த படத்தை இயக்கவுள்ள சேகர் கபூர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.இதனால் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
‘லிட்டில் டிராகன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.