August 12, 2017
தண்டோரா குழு
பிரபல தனியார் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகை ஓவியாவால் இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேப்பை பெற்றது.
இதற்கிடையில்,மன அழுத்தம் காரணமாக ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதனால் பிக்பாஸ் பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது என்றே சொல்லாம்.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புதிதாக சில பிரபலங்களை பிக்பாஸ் ஹவுஸிற்குள் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் பார்த்து அது குறித்து டுவிட்டரில் விமர்சனம் செய்து வந்த நடிகை ஸ்ரீ பிரியா, காமெடி நடிகர் சதீஸ் ஆகியோர் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர்.
இதனால் இவர்கள் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.