August 16, 2017
தண்டோரா குழு
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படமான விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து வருகிற 24ம் தேதி ரிலீசுக்காக காத்திருக்கிறது.
படத்தில் வரும் டீசர் காட்சிகள் மற்றும் பாடல்கள் விவேகம் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே எற்படுத்தியுள்ளது.
படத்தின் டிரைலர் வெளியாகும் என்ற செய்தியை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் விவேகம் படத்தின் பாடல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத் கிளைமாக்ஸ் பாடல் பற்றி உளற உடனே சுதாரித்து கொண்ட இயக்குனர் சிவா அனிருத்தை தொடையில் தட்டி எச்சரிக்கை செய்தார். கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷராஹாசன் விவேகம் படம் மூலம் தமிழில் அறிமுகவாது குறிப்பிடத்தக்கது.