August 16, 2017
தண்டோரா குழு
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி’பிக் பாஸ்’. நடிகை ஓவியாவால் இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
மக்கள் மனதை கொள்ளையடித்த நடிகை ஓவியா சில காரணங்களால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஓவியா வெளியேறியதால் நிகழ்ச்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
இந்நிலையில், கடந்த வாரம் கமல் புது வரவுகள் வரக்கூடும் என்று சொன்னார். அதன் படி தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ‘கிடாரி’ பட நாயகி சுஜா வருணி நுழைந்துள்ளாராம். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ இந்த விஷயத்தை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.