August 16, 2017
தண்டோரா குழு
‘அமைதிப்படை’படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, பிரபலமானவர் அல்வா வாசு.இவர், வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான இவர்,இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக, கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே இன்று, அல்வா வாசுவின் மனைவி அமுதாவிடம், அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை, விரைவில் உயிர் பிரிந்துவிடும். ஆகையால் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம்’ என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அல்வா வாசுவிற்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார்.