August 17, 2017 தண்டோரா குழு
ராஜஸ்தானிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், குரங்குகள் தேசிய கொடியை ஏற்றிய வினோத சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் புஷ்கர் நகரிலுள்ள பிரக்யா பால் நிகேதன் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.பள்ளியின் அறக்கட்டளை தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். அவருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 குரங்குகள், கம்பத்தில் கட்டியிருந்த தேசியக் கொடியை பறக்கவிட்டன.
இந்நிலையில் திடீரென பள்ளிக்கு வந்த இரண்டு குரங்குகள், கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை நோக்கி வேகமாக வந்தன. கொடி கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கொடியின் கயிற்றை இழுத்து, கொடியை ஏற்றின. கொடியும் அழகுடன் பறந்தது.இதை சிறிதும் எதிர்பார்க்காத அந்த பள்ளி நிர்வாகம், செய்வது அறியாது நின்றது. இதைப் பார்த்த பள்ளி மாணவ மாணவியர் தங்கள் கரங்களை தட்டி, சிரித்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியை பள்ளியின் இருந்த ஒருவர் காணொளியாக எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டார். அது வைரலாக பரவி வருகிறது.