August 17, 2017
தண்டோரா குழு
அயர்லாந்தைச் சேர்ந்த தேஸ் மாண்டை இரோம் ஷர்மிளா இன்று கொடைகானலில் பதிவு திருமணம் செய்துக் கொண்டார்.
மணிப்பூரில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா.
இதனிடையே மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இதனால் மன ஆறுதலுக்காக கொடைக்கானலில் தனது காதலருடன் தங்கியுள்ளார்.இந்நிலையில் இரோம் ஷர்மிளாவின் திருமணம் இன்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொடைக்கானலில் நடைபெற்றது .