August 17, 2017 தண்டோரா குழு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்ட ஒரு பதிவால், அமேசான் நிறுவனத்திற்கு சுமார் 5.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனம் முதல் நிலையை வகித்து வருகிறது. இந்நிலையில், “அமேசான் நிறுவனம், வரி செலுத்தும் சில்லறை வியாபாரிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டார். டிரம்பின் இந்த பதிவு வெளியான 2 மணிநேரத்தில் அமேசான் நிறுவனம் சுமார் 5.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் கடும் வீழ்ச்சியை அடைந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பதாக, கடந்த ஜூன் மாதம், டிரம்ப் அமேசான் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றின் உரிமையாளரை விமர்சித்து, “சில நேரங்களில் அமேசான் நிறுவனத்தின் பாதுகாவலர்கள் என்று கருதப்படும் வாஷிங்டன் போஸ்ட், இணையத்தளத்தின் வரிகளை சரியாக கட்டுவதில்லை” என்று டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிடிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.