August 17, 2017
தண்டோரா குழு
பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணாநந்தி தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலுக்கான பிரசாத்திற்காக அங்கு சென்றார்.
அப்போது ரசிகர்கள் பாலகிருஷ்ணாவைக் கண்டதும் சந்தோஷத்தில் அவருடன் செல்பி எடுக்க ஆர்வத்துடன் அவரை சூழ்ந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கடுப்பான அவர் ரசிகர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார். அவரது இச்செயல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.