August 17, 2017
தண்டோரா குழு
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்க்கதக்கது என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அப்பல்லோ நிர்வாகம் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது விசாரணையின் மூலம் தெரியவரும். மிகச்சிறப்பான சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது.விசாரணை ஆணையம் மூலம் தேவையற்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்என கூறியுள்ளது.