August 18, 2017
தண்டோரா குழு
பிரபல தனியார் தொலைகாட்சியில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஆரம்பத்தில் ஓவியா, ஜூலி என ரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
ஓவியா ஜூலி வெளியேறிப்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மவுசு குறைந்தது. இதனால் பிக் பாஸ் நிர்வாகிகள் அடுத்தடுத்த போட்டியாளர்களை களமிறக்கி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் பிந்து மாதவி களமிறக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சுஜா வருணியும், நேற்று சிந்து சமவெளியில் நடித்த ஹரிஷ் கல்யாணும் புதிதாக களமிறங்கினர்.இந்நிலையில் அடுத்த புது வரவாக நடிகை காஜல் பசுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று முதல் நுழைய உள்ளார்.
இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி, ஏராளமான படங்களில் நடிகையாகவும் நடித்துள்ளார். காஜல் பசுபதி, ஆட்டோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து இறங்கி போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
இந்தக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்ட புதிய புரமோவில் இடம்பெற்றுள்ளது.அடுத்தடுத்து புது போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.