August 18, 2017
தண்டோரா குழு
வெற்றிவேல் தலைமையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னையில் திடீர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். அதிமுக இரு அணிகள் இணையுமா என எதிர்பார்க்கபட்ட நிலையில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உளள தனியார் உணவு விடுதியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வெற்றிவேல்,செந்தில் பாலாஜி மற்றும் சிஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.