August 19, 2017
tamilsamayam.com
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு நோ:
விஜய்யின் ‘மெர்சல்’ ஆடியோ வெளியீடு வரும் 20ம் தேதி நடைப்பெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விழாவுக்கு வர முடியாது என ரஜினி கூறிவிட்டதாக தெரிகிறது. அதே போல கமலும் வரவில்லை என கூறப்படுகிறது.
மகேஷ் பாபுவுக்கு ஓகே :
விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என கூறிய ரஜினி, மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
இதற்கு, மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா மீது பெரும் மரியாதை வைத்துள்ளதாகவும், அவர் தமிழில் சிவாஜி போன்ற உயர்ந்த நடிகர் என்பவரால், அவர் மீதான மரியாதை காரணமாக ‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
இதனால் மகேஷ் பாபுவின் தமிழ் எண்ட்ரிக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.