August 19, 2017 தண்டோரா குழு
இரு அணிகள் இணைய நான் முட்டுக்கட்டையாக இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா என இரண்டு அணிகளாக பிரிந்து தற்போது ஓபிஎஸ் அணி , எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்று அணிகளாக பிரிந்து உள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்ட நிலையில் இரு அணிகள் இணைப்பு குறித்த ஆலோசனைகள் பரபரப்பாக இருந்து வந்தது.
இதற்கிடையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியாகும் என்றும், முதல்வரின் நீதி விசாரணையை ஏற்க முடியாது என்றும் ஒ.பி.எஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி
இரு அணிகள் இணைய நான் முட்டுக்கட்டையாக இல்லை என்றும், ஓபிஎஸ் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.அதேசமயம் தர்மயுத்தத்தின் மூலக்கரு நிறைவேற்றப்படவில்லை எனில், அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.