August 19, 2017
தண்டோரா குழு
கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழைய போட்டியாளர்கள் பலர் வெளியேறிய நிலையில் தற்போது புதிய போட்டியாளர்களாக சுஜா, கல்யாண் மற்றும் காஜல் ஆகியோர் உள்ளே சென்றுள்ளனர்.
எனினும்,பழைய போட்டியாளர்கள் தற்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியிட்ட பிரோமோவில் கமல் கோபத்துடன் இனி உங்களிடம் என்னால் பேச முடியாது, கட் பண்ணுங்க என கோபத்துடன் கூறுவது போலவும் இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் அவரிடம் சார் சார் என கெஞ்சுவது போலவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இவரது இந்த கோவத்துக்கு யார் காரணம்? என்ன நடந்தது? என்பது ரசிகர்களுக்கு பெரும் கேள்வி குறியாக உள்ளது.