August 21, 2017 தண்டோரா குழு
உயிரினங்கள் வாழ மிக அவசியாமாக கருதப்படும் ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க அமெரிக்காவின் நாசா மையம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வரும் 2020ம் ஆண்டு, செவ்வாய் கிரகத்திற்கு, ரோவர் என்னும் புதிய விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளது. அந்த விண்கலத்தில் உயிரினங்கள் உயிர்வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய பாக்டீரியா அல்லது பாசி இனத்தை அதில் அனுப்பி வைக்கப்படும் என்று கருதப்படுகிறது.
அதோடு, பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பயன்படுத்தப்படும் ராக்கெட் எரிபொருளாகவும் உயிரினங்கள் சுவாசிக்கவும் ஆக்சிஜன் பயன்படும். அந்த சோதனை வெற்றிபெற்றால், எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு செவ்வாய் கிரகம் தகுதியான இடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பூமியின் வளிமண்டலத்தில் 21 சதவீதம் ஆக்சிஜன் அளவை ஒப்பிடும்போது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் 0.13 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே உண்டு.
இந்நிலையில் 2020-ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்புகிறது. அத்துடன் பாக்டீரியா அல்லது பாசி இனங்கள் அனுப்பப்படுகின்றன. அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.