August 21, 2017 தண்டோரா குழு
அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்வோர்களின் மீது புகார்கள் தெரிவிக்க http://gdp.tn.gov.in என்ற வலைதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமப்பு மேற்கொள்ளப்பட்டது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தபால் மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் அளித்து வந்தனர்.
தற்போது, அந்த நடைமுறையை எளிமையாக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பின் மீது http://gdp.tn.gov.in என்ற வலைதளம் மூலம் அறிவிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் “பொதுமக்கள் இந்த இணையவழியினைப் பயன்படுத்தி அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு குறித்து புகார்களை பதிவு செய்து தீர்வு பெற அறிவுறுத்தப்படுகிறது,” எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.