August 22, 2017 தண்டோரா குழு
முத்தலாக் முறைக்கு ஆறு மாதம் இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முத்தலாக் விவகாரம் குறித்த வழக்கில் மத்திய அரசு உரிய சட்டத்தை இயற்றும் வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் முத்தலாக் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமை என்ற கருத்தைப் பற்றி தெரிவித்த நீதிபதிகள், முத்தலாக் அரசியல் சாசனச் சட்டத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் அதில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், முத்தலாக் தொடர்பாக உரிய வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை முத்தலாக் நடைமுறைக்கு இடைக்காலத் தடை இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.