August 22, 2017
தண்டோரா குழு
என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு இல்லை என்று துணை அமைப்பு செயலாளரும், எம்.பி யுமான வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
வைத்தியலிங்கத்தை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டார் அதில், “கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவர் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் செய்யபட்டுள்ளார் உள்ளதாக தினகரன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்,” எனக் கூறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியலிங்கம்,
“என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு இல்லை. துணைபொது செயலாளர் பொறுப்பில் இருந்து ஏற்கனவே தினகரன் நீக்கப்பட்டு விட்டார். எங்களுக்கு99.99 சதவீத தொண்டர்கள் ஆதரவு உள்ளது,” என்றார்.