• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘வேல் சேலஞ்ச்’ விளையாட்டுக்கு மாறாக ‘பிங்க் வேல் சேலஞ்ச்’

August 22, 2017 தண்டோரா குழு

ப்ளூ வேல் சேலஞ்ச் என்ற இணைய விளையாட்டுக்கு மாற்றாக, பிங்க் வேல் சேலஞ்ச் என்ற புதிய இணைய விளையாட்டு இப்போது பிரபலமாகி வருகிறது.

ரஷ்யா நாட்டை சேர்ந்த புதேய்கின் என்பவர் மிகவும் ஆபத்தான ”ப்ளூ வேல் சேலஞ்ச்” என்னும் இணைய தள விளையாட்டை அறிமுகம் செய்தார். அந்த விளையாட்டை 50 நாட்கள் விளையாட வேண்டும். கடைசி நாளில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது அந்த விளையாட்டின் விதிமுறை.

உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் அந்த விளையாட்டை விளையாடி தற்கொலை செய்து கொண்டனர். அந்த விளையாட்டு, இந்தியாவிற்கும் பரவியது. அதை விளையாடிய பள்ளி மாணவர்கள், தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, இணையதளத்தில் இருக்கும் அந்த விளையாட்டின் இணைப்பை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது, ‘ப்ளூ வேல் சேலஞ்ச்’ விளையாட்டுக்கு மாறாக ‘பிங்க் வேல் சேலஞ்ச்’ என்னும் புதிய இணையதள விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டு பிரேசில் நாட்டிலிருந்து வெளியாகி இருக்கிறது.

“ப்ளூ வேல் சேலஞ்ச்” போல், 50 வெவ்வேறு சவால்கள் உண்டு. நீங்கள் பல நாட்கள் பேசாத ஒருவருடன் பேச வேண்டும். 22 வினாடிகளில் “பிங்க் வேல்” என்று எத்தனை முறை எழுத முடியுமோ, எழுதுங்கள். உங்களை மகிழ்ச்சிபடுத்தும் உடையை அணிந்துக்கொண்டு, புகைப்படம் எடுத்து, அதை வெளியிடுங்கள். உங்கள் பெற்றோர் அல்லது உறவினர் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களை நேசிக்கிறதாக சொல்லுங்கள் உள்ளிட்ட 50 சவால்களை நிறைவேற்ற வேண்டும்.

இணையதளத்தின் மூலம் அன்பையும் நல்ல முறையில் பரிமாற முடியும் என்பதை நிரூபிப்பதே அந்த விளையாட்டின் நோக்கம் ஆகும். ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் 50வது நாள் இறுதியில், தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால் பிங்க் வேல் விளையாட்டில் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்பது விதி. இந்த விளையாடிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க