August 23, 2017
tamilsamayam.com
ரஜினிக்கு பிறகு தல அஜித்தின் விவேகம் படத்திற்கு அமெரிக்காவில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விவேகம் நாளை முதல் உலகம் முழுதுவம் வெளியாகவுள்ளது. முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், ரஜினி படங்களுக்கு அடுத்து தல அஜித் நடித்துள்ள விவேகம் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இப்படம் 300 திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைக்க உள்ளது.