August 23, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான இல்லமான வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்குரிய மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனையடுத்து வெள்ளை மாளிகையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை எனவும்,அவர் பிரச்சார பேரணியில் கலந்து கொள்வதற்காக அரிசோனா சென்றிருந்தாகவும் கூறப்படுகிறது.