August 23, 2017
தண்டோரா குழு
சிங்கப்பூரில் பூனையை சுற்றி மாஸ்கிங் டேப் மூலம் இறுக்க கட்டிய இளைஞனுக்கு 6,௦௦௦ டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரை சேர்ந்த லி சியோஜிங் என்ற இளைஞன், வீட்டிற்குள் நுழைந்த பூனை ஒன்று, சிறுநீர் கழித்துவிட்டது என்பதால், மாஸ்கிங் டேப்பை பயன்படுத்தி, அதை இறுக்க சுற்றி, அதை வீதியில் விட்டுள்ளான்.மாஸ்கிங் டேப் மூலம் கட்டப்படும் பொருள்கள், அதோடு நன்கு ஒட்டிக்கொள்ளும். அதை பிரித்து எடுப்பது சிரமம்.
பூனை தன்னுடைய உடம்பைச் சுற்றி கட்டியிருக்கும் டேப்பிலிருந்து வெளியே வர முயன்றுள்ளது. ஆனால், அதனால் முடியவில்லை. பூனைப்படும் சிரமத்தைக் கண்டவர்கள், அதை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர்.
உடனடியாக அந்த பூனைக்கு மயக்க ஊசி தரப்பட்டு, அதன் உடம்பில் சுற்றி கட்டியிருந்த மாஸ்கிங் டேப்பை வெளியே எடுத்துள்ளனர். நல்ல வேலையாக அதன் உடம்பில் காயங்கள் எதுவுமில்லை. இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், பூனையை சுற்றி மாஸ்கிங் டேப்பால் கட்டிய இளைஞனுக்கு 6,௦௦௦ டாலர் அபராதம் விதித்தனர்.