August 23, 2017
தண்டோரா குழு
சவூதி அரேபியாவில் ‘மகரேனா’ பாப் பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டா நகரின் பிஸியான சாலையில், 1993ல் பிரபலமான ‘மகரேனா’ பாப் பாடலுக்கு, 14 வயது சிறுவன், நடுரோட்டில் நடனமாடி கொண்டிருந்தான். அதனால், வாகனங்கள் செல்ல தடையாக இருந்தது.இதையடுத்து, அந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த சிறுவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், சவுதி அரேபியா நாட்டின் சட்டத்தின்படி, அவனுக்கு கசையடி மற்றும் சிறைதண்டனை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அந்த காணொளியை பார்த்தவர்கள் அவன் செய்தது ஒழுக்கமற்ற செயல் என்று தெரிவித்தனர். இச்சிறுவனுக்கு ஆதரவாக சிலர் கருத்து கூறி வருவதுடன், அச்சிறுவனை `ஹீரோ` என்றும் அவர்கள் வர்ணித்துள்ளனர்.சாலையில் சிறுவன் ஆடிய நடன காணொளி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.