August 23, 2017
தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர்’ படத்தினை இயக்கி வருகிறார்.
இந்த படத்தினை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து ஓர் படத்தினை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், முருகதாஸ் அடுத்து விஜய் படத்தை இயக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் ரஜினியுடன் இணைந்தால் தளபதி படம் என்ன ஆகும் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஏனெனில் தளபதி படத்தினை முடித்த பின்பே முருகதாஸ் தலைவர் படத்தினை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.