August 24, 2017
tamilsamayam.com
பயிற்சியின் போது தோனி அடித்த பந்து கேமிராவில் பட்டதால், கேமிரா மேன் மூட்டையைக்கட்டி ஓடியுள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை நடக்கிறது.
இதற்காக பயிற்சியில், இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, மணீஷ் பாண்டே, ரகானே, கேதர் ஜாதவ், தோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ரோகித், பாண்டே, ரகானே, ஜாதவ் என வரிசையாக வலைப்பயிற்சி செய்தனர்.
தனது வாய்ப்புக்காக தோனி, மிகவும் பொறுமையாக காத்திருந்தார். அவருக்கான வாய்ப்பு வந்ததும், பேட்டிங் செய்த தோனி, தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்படி ஆடிய ஆட்டத்தில், தோனி அடித்த பந்து வீரர்களின் பயிற்சியை பதிவு செய்ய வைத்திருந்த கேமிராவை பதம் பார்த்தது.
இந்த ஷாட்டால், அதன் அருகில் இருந்த கேமிராமேன் பதறிப்போனார். உடனடியாக கேமிராவை சோதித்த அவர், மேல் கவர் உடைந்ததுடன் வேகமாக பெவிலியன் நோக்கி சென்றுவிட்டார். தோனியை வெளியேற்ற நினைப்போருக்கு பாடம் கற்பிக்க நினைத்துள்ளார் போல தோனி. இந்த பயிற்சியின் போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நடுவராக நின்றுள்ளார்.