August 24, 2017
தண்டோரா குழு
நீட் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியான நிலையில், மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கியது.
நீட் தேர்விலிருந்து விளக்குக் கோரி தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த அவசர சட்டத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை மருத்துவ கல்லூரியில் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.மேலும்,பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.