August 24, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவில் சூரிய கிரகணத்தன்று பிறந்த குழந்தைக்கு ‘எக்லிப்ஸ்’ என்னும் வித்தியசமான பெயரை வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் 99 ஆண்டுகளுக்கு பிறகு, ஆகஸ்ட் 21ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டது.இந்நிலையில் அமெரிக்காவின் கரோலினா மாகணத்தில் உள்ள கிரீன்வில்லே மருத்துவமனையில் ஃப்ரீடம் யுபங்ஸ் என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை சுமார் 6 பவுண்ட் 3 அவுன்ஸ் அதாவது 2.8 கிலோ எடை இருந்தது.குழந்தைக்கு “வயலட்” என்னும் பெயரை வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.ஆனால் சூரிய கிரகணத்தன்று பிறந்த தங்கள் குழந்தைக்கு கிரகணத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் ‘எக்லிப்ஸ்’ என்ற வார்த்தையையே குழந்தைக்கு பெயராக வைத்தனர்.
மேலும், சூரிய கிரகணத்தன்று பிறந்த என் குழந்தைக்கு மருத்துவமனை நிர்வாகம் அழகிய ஆடை ஒன்றை பரிசாக தந்தனர்” என்று அந்த குழந்தையின் தாய் தெரிவித்தார்.