August 24, 2017
தண்டோரா குழு
தனிமனித ரகசியத்தை பாதுகாப்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என்று ஆதாரில் வழங்கப்படும் தனிமனித ரகசியங்கள் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், தனிமனித ரகசியங்களை பாதுகாப்பது அடிப்படை உரிமைதான் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கயுள்ளது.
மேலும் ஆதார் கட்டாயமாக்குவது பற்றிய எந்த விளக்கங்களும் அதில் குறிப்பிடப்படவில்லை . இந்த தீர்ப்பின் மூலம் தனிமனித தகவல்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை மத்திய அரசு வழங்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.