August 24, 2017
தண்டோரா குழு
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இந்த பரிந்துரையை ஏற்ற சபாநாயகர் தனபால் 19 எம்.எல்.ஏ.,க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், ஒரு வாரத்தில் இது குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் உத்தரவிட்டுள்ளார்.