August 24, 2017 தண்டோரா குழு
இத்தாலி நாட்டில் உள்ள மிகப்பெரிய பனிமலை சிகரமான மொன்ட் பிளான்க்கில் சுமார் 2௦ ஆண்டுகளுக்கு முன், மலையேற சென்று காணாமல் போன 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்த மலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் மலையேற சென்றுள்ளார்.அப்போது அவர் மலை எரிக்கொண்டிருந்த பகுதியில் 3 பேருடைய உடல்கள் பனிக்குள் புதைந்திருப்பதை பார்த்துள்ளார். உடனே அந்த உடல்களை புகைப்படம் எடுத்து, மீட்பு சேவைக்கு தகவல் தந்துள்ளார். தகவல் அறிந்த அவர்கள் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்தனர். அந்த 3 பேரின் உடல்களை அங்கிருந்து மீட்டு, பிரேத சோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 2௦ ஆண்டுகளாக அந்த உடல்கள் அங்கு புதைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரான்ஸ், செக் குடியரசு, தென் கொரியா மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள், மொன்ட் பிளான்க் பகுதியில் மலையேற வருகிறார்கள். அப்படி வரும்போது, விபத்தில் சிக்கி உயிரழந்து விடுகின்றனர். கடந்த ஜூலை மாதத்தில், சுமார் 75 ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தம்பதினரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.