August 26, 2017 தண்டோரா குழு
குர்மித் ராம் ரஹீம் சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிபதிக்கு பலத்த பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, ஹரியானா அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சட்டப்பட்ட ஆன்மீகவாதி குர்மீத் ராம் ரஹீமை பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.இதனால், பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 32 பேர் உயிரிழந்த நிலையில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், தீர்ப்பளித்த நீதிபதிக்கு மிரட்டல்கள் வருவதால், அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை, ஹரியானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதி ஜக்தீப் சிங்குக்கு மத்தியப்படை பாதுகாப்பு என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அது சி.ஆர்.பி.எஃப். வீரர்களால் மேற்கொள்ளப்படுமா? அல்லது சி.ஐ.பி.எஃப் வீரரர்களால் மேற்கொள்ளப்படுமா? என்பதை உளவுத்துறை வழங்கும் தகவல்களைக் கொண்டு முடிவெடுக்க இருப்பதாக மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.