June 3, 2016 தண்டோரா குழு
உலகளவில் தொழில் நுட்பம் பெருக பெருக பல்வேறு சாதனைகளை மக்களும், அரசாங்கமும் செய்து வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. சாதாரணமாக நிகழ்த்தப்படும் சாதனைகள் விரைவிலேயே மற்றவர்களால் முடியடிக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்தச் சாதனை வரிசையில் தற்போது புதிதாகச் சேர்ந்துள்ளது சுவிச்சர்லாந்து நாட்டின் சுரங்க ரயில் பாதை. இது சாதனை எனச் சொல்ல என்ன இருக்கிறது உலகத்தில் பல நாடுகள் செய்தது தானே என நினைக்க வேண்டாம். இதன் நீளம் 35 மைல் அதாவது 56.3 கிலோமீட்டர். இந்தச் சுரங்க ரயில் பாதை திட்டம் 1947ம் ஆண்டே திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக 1992ம் ஆண்டுதான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பின் அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் அந்த ஆண்டே பணிகள் துவங்கப்பட்டுத் தொடர்ந்து 17 ஆண்டுகள் பணி நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது. இந்தப் பாதை சுவிஸர்லாந்து நாட்டின் பொடியா மற்றும் ஏற்ஸ்ட்பில்ட் என்ற நகரங்களை இணைக்கிறது. இந்தப் பாதையின் மேற்புறம் சுமார் 2.5 கிலோமீட்டர் உயரமுள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது.
இந்தப் பனியின் பொது மலையில் இருந்து சுமார் 28 மில்லியன் டன் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டது. அவை அனைத்தும் மீண்டும் அந்தப் பணிகளுக்கே சிமெண்டாக மாற்றிப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாதையை அமைக்க உருவாக்கப்பட்ட இயந்திரம் மிகவும் பிரமாண்டமானது. அந்து தேவையான விட்டம் கொண்ட ஒரு வட்ட வடிவிலான துளையை மலையில் போட்டுக்கொண்டே செல்லும் பின்னர் தொடர்ந்து அந்தத் துளையின் பரப்பில் சிமெண்டால் ஆன காங்கிரீடையும் அமைத்துக்கொண்டே வரும். இதன் மூலம் பல்வேறு இடர்பாடுகளை எளிதாகக் கையாண்டதாக அந்தப் பணியில் ஈடுபட்ட பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் முதல் பயணத்தில் பயணம் செய்ய நாடு முழுவதும் இருந்து 500 பேர் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் அந்தப் பயணத்தை துவங்கிவைக்க பல்வேறு தலைவர்களும் அங்கு வந்து சிறப்பித்திருந்தனர். 1,220 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட இந்தச் சுரங்க ரயில் பாதைதான் தற்போது அதிக தூரமுள்ள சுரங்க ரயில் பாதையாக உள்ளது. ஆனால் சமீபமாக சீன நீருக்கடியில் செல்லும் சுரங்கப்பாதையை 76 மைல் தூரத்திற்கு கட்ட இருப்பதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.