August 28, 2017 manakkumsamayal.com
கடலை மாவு சாம்பார்
Ingredients
பெரிய வெங்காயம் -1
தக்காளி -1
பச்சை மிளகாய் -2
கடலை மாவு -1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு -1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
Method
Step 1
தாளிக்க வேண்டிய பொருட்கள்: கடுகு உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் கருவேப்பில்லை -தேவையான அளவு
Step 2
முதலில் வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் பொடியாக வெட்டிக்கொள்ளவும் .பின்பு இஞ்சி பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும் (மிக்ஸியில் அரைக்க வேண்டாம்).
Step 3
பின்பு கடலை மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாய்,வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் நசுக்கி வைத்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
Step 4
வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். கடலை மாவு சாம்பார் தயார். குறிப்பு:கடலை மாவு ஊற்றி பின்பு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும் இல்லையென்றால் சாம்பார் கெட்டியாக வரும்.