August 28, 2017 தண்டோரா குழு
கோவை ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ வாக நியமிக்கப்பட்ட சுகன்யா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கோவை ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ வாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபி ராஜூவின் மகள் சுகன்யா கடந்த கடந்த 11ம தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கிடையில், சுகன்யா நியமனம் முறைகேடானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், இன்று அவர் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட், மேலாண்மை இயக்குனருக்கு முகவரியிட்ட கடிதத்தில், தான் சிஇஓ பதவிக்கு முழு தகுதியுடன் எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் தேர்வு செய்யபட்டதாகவும், விரும்பத்தகாத விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் இப்பணியை தொடரவிரும்பவில்லை என தனது பதவியை ராஜினாமா செய்தவதாக தெரிவித்தார்.
இவரது பணி விலகல் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தால் ஏற்றக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, புதிய சிஇஓ தேர்வு செய்யபடும் வரை கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன்சிஇஓவாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.