August 28, 2017 தண்டோரா குழு
மெக்ஸிகோவில் பள்ளத்தில் விழுந்த 14 வயது சிறுவனை, லப்ரடோர் இனத்தை சேர்ந்த நாய் காப்பாற்றியுள்ளது.
மெக்ஸிகோ, கலியேனா நகரை சேர்ந்த ஜுஆன் என்னும் 14 வயது சிறுவன், சியேரா மாத்ரே ஒரியேண்டல் மலைபகுதியில் நடந்த விடுமுறைக்கான மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டான். அந்த முகாமில், மாலை நேரத்தில், மாணவர்கள் ஒரு இடத்தில் தீ மூட்டி குளிர்காயிந்து கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்தனர்.
மாலையில் குளிர்காய தேவைப்படும் விறகுகளை எடுத்துவர சிறுவன் ஜுஆன், அருகிலிருந்த காட்டு பகுதிக்கு சென்றான். அந்த முகாமிலிருந்த நாய் மேக்ஸ் அவனை பின்தொடர்ந்து சென்றது. தேவையான விறகுகளை எடுத்துக்கொண்டு, முகாமிற்கு திரும்பி வரும்போது, பள்ளம் ஒன்றில் அவன் தவறி விழுந்தான்.
அவனால், மேலே ஏறி வரமுடியவில்லை. அவனை பின்தொடந்து வந்த நாய் அவன் விழுந்த பள்ளம் அருகில் நிற்பதை கண்டான். அவன் விழுந்த பள்ளத்தில் இறங்கி, அவனை மேலே அழைத்து வர நாய் முயன்றது அவன் மேலே வந்துவிட்டான்.
பின்னர் சிறுவன் விழுந்த இடத்தின் அருகில் ஒரு குளம் இருந்தது. சிறுவனும் மேக்ஸ்சம் குளத்தில் இருந்த தண்ணீரை குடித்து, காட்டிலிருந்த கனிகளை உண்டு, சுமார் இரண்டு நாட்கள் அங்கேயே இருந்தனர்.
அதன்பிறகு, அந்த இடத்திற்கு அருகிலிருந்த வீட்டை அடைந்து, அங்கிருந்தவர்களிடம் நடந்ததை ஜுஆன் தெரிவித்தான். உடனே அவர்கள், அங்கிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் தந்தனர். தகவல் அறிந்த அவர்கள் ஜுஆனும் மேக்ஸ்சம் இருந்த விட்டிருக்கு வந்தனர்.
இரண்டு நாட்கள் சாப்பிட சரியான உணவு இல்லாததாலும், பல தூரம் நடந்து வந்ததால் ஏற்பட்ட களைப்பால் இருந்த சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சிகிச்சைக்கு பிறகு, வீடு திரும்பிய ஜுஆன், தன்னுடைய உயிரை காப்பாற்றிய மேக்ஸ்சை தத்து எடுக்க விருப்பம் தெரிவித்தான்.