• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போதிலும் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து சம்பாதிக்கும் சிறுவன்

August 28, 2017 தண்டோரா குழு

கொல்கத்தாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 19 வயது சிறுவன், தனது ஓவிய திறமையாலும், சிலைகளை வடிவமைக்கும் திறமையாலும் தன் மருத்துவத்திற்கு தேவையான செலவுகளை அவனே சம்பாதித்து வருகிறான்.

2011-ம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் வசித்து வரும் 19 வயது சர்தாருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக சரோஜ் குப்தா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு, அவன் சிகிச்சை பெற்று வருகிறான்.

அவனது சிகிச்சைக்காக, அவருடைய தாயின் நகைகள் விற்கப்பட்டு, 1.5 லட்சம் ரூபாய் கிடைத்தது. கொல்கத்தாவிலுள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், மேலும் 3 லட்சம் ரூபாய் கிடைக்க அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் உதவி செய்தனர்.

நகை விற்கப்பட்டு கிடைத்த 1.5 லட்சம் ரூபாய் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் கிடைத்த 3 லட்சம் ரூபாய், சர்தாரின் சிகிச்சைக்கு போதுமானதாக இல்லை. சர்தாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருக்கு நன்றாக வரையும் திறன் இருப்பதை அறிந்து, மருத்துவமனையிலிருந்தே படங்களை வரையும்படி, அவருக்கு ஊக்கம் அளித்தனர். அதன்பிறகு, சர்தார் வரைந்த புத்தரின் படத்தை, புதுதில்லி இருக்கும் ஒரு தனியார் நிறுவனம் 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.

அதேபோல், மருத்துவமனையிலிருந்தபடியே, துர்கா பூஜைக்கு ஒரு மாதத்திற்கு முன், துர்காதேவியின் சிலையை செய்து, அதை விற்றார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோதிலும், இவ்வாண்டு தனது பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்தார். மேற்கு வங்கத்திலுள்ள கலைக்கல்லூரியில் சேரவேண்டும் என்ற தன் ஆர்வத்தை நிறைவேற்ற, சிலைகளை செய்து அதை விற்று, தனது படிப்பிக்கு தேவையான பணத்தை தற்போது சேர்த்து வருகிறார்.

மேலும் படிக்க