August 29, 2017 தண்டோரா குழு
தமிழக அரசால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டமைக்கு மாணவ, மாணவிகள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் 70 ஆண்டுகால எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்திடும் வகையில் தமிழக அரசால் இருபாலர் பயிலும் புதிய பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியி ஆகஸ்ட் 8 –ம் தேதி திறக்கப்பட்டது.
நடப்பு கல்வி ஆண்டிலேயே BA (ENGLISH), B.COM (ECONOMICS), B.SC (MATHEMATICS), B.COM (CA), B.COM (PA), BBA, பாட பிரிவுகளும் மாணவ மாணவியர் சேர்க்கையை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பாடப்பிரிவுகளுக்கும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதுக் குறித்து மாணவர் சரவணன் கூறுகையில்,
“நான் தற்பொழுது தொண்டாமுத்தூரில் தொடங்கப்பட்டுள்ள புதிய கல்லூரியில் B.SC (MATHEMATICS)முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை கூலி வேலை செய்து வருவதால், தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லை. அரசுக் கலை கல்லூரியில் கல்வி கட்டணம் மிக மிக குறைவாக இருக்கிறது. மேலும், இங்கு படிப்பதால் எனது எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது. இதனை ஏறப்படுத்தி தந்த தமிழக அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.
இதுக்குறித்து மாணவர் மகேஷ் கூறுகையில்,
“இக்கல்லூரியில் படிப்புக்கு ஏற்றவாறு அனைத்து ஆய்வக வசதியுடன் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். இதனால் எங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அரசு கலை கல்லூரியில் படிப்பதால் முன்னனி நிறுவனங்களிடமருந்து பணியில் சேர்ந்துக் கொள்ள முன்னுரிமை வழங்குகின்றனர்.
மேலும் விளையாட்டுக்கு நல்ல முக்கியத்துவம் தருகிறார்கள். இதனால் எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெறுகிறது,” என்றார்.