August 29, 2017
tamilsamayam.com
‘விவேகம்’ படத்தின் கதை என்னுடைய என்று தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் உருவான ‘விவேகம்’ தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை என்னுடையது என தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் என்பவர் தற்போது கூறி வருகிறார்.
இயக்குனர் ரவீந்தர் தன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: “அஜீத்திற்கு நெருங்கிய உதவியாளர் ஒருவரிடம் கதையை கூறினேன்.ஆனால் அறிமுக இயக்குனருடன் அவர் பணியாற்றமாட்டார் என கூறி அவரை அஜீத் சந்திக்க அனுமதிக்கவில்லை. தற்போது ‘விவேகம்’ படம் பார்க்கும்போது 60 சதவிகிதத்திற்கு மேல் என் கதையை பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த கதையை ‘மி-நா’ என்ற பெயரில் படமாக எடுக்க நினைத்திருந்தேன். “நான் பணத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ இதை கூறவில்லை. என் கதையை அவர்கள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டாலே போதும்“ என்கிறார் இயக்குனர் ரவீந்தர்.