August 29, 2017
tamilsamayam.com
யாராலும் தோற்கடிக்க முடியாத சாதனை நாயகன் மேவெதர் என்ற பெருமையுடன் தொழில் முறை குத்துச் சண்டை போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
தொழில் முறை குத்துச்சண்டை ஜாம்பவானகளான அமெரிக்காவின் புளோயிட் மேவெதர் இதுவரை தான் விளையாடிய 49 போட்டியில் அனைத்திலும் வென்று சாதனை படைத்துள்ளார்.
கடைசியாக மேவெதர், அயர்லாந்தின் கனோர் மெக்கிரிகோரிடம் மோதிய போட்டி குத்துச் சண்டை வரலாற்றில் மறக்க முடியாததாக அமைந்தது.
இந்த போட்டியின் மூலம் குறைந்தபட்சம் 4000 கோடி ரூபாய் வருவாயை போட்டி ஒருங்கிணைப்பு குழு ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேவெதருக்கு மட்டும் 640 கோடி ரூபாய் பங்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று வசூல் போட்டியை அடுத்து தொழில் முறை போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக மேவெதர் அறிவித்துள்ளார்.