August 29, 2017
தண்டோரா குழு
பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் நடைபெற்ற பல்வேறு சிறை விதிமீறல்களை அம்பலப் படுத்தியவர் டி.ஐ.ஜி.ரூபா.
அதன்பின் அவர் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்து படம் இயக்க இருப்பதாகவும், இதுகுறித்து ரூபாவிடம் பேசி சம்மதம் வாங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி ரூபா கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.அதைப்போல் அனுஷ்காவையும் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.