August 29, 2017
தண்டோரா குழு
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 26 ஆண்டுகளாக ராஜீவ் கொலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கலாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பரிந்துரைகளை அரசுக்கு அளித்தவர் முத்துக்குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.